For Power Failure Complaints - Call 9498794987
Tamilnadu , India
நுகர்வோருக்கான தகவல்
விண்ணப்பிக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான தகவல்கள்
- கள ஆய்வின் போது, விண்ணப்பத்தின் தேவைக்கு ஏற்றபடி வளர்ச்சிக் கட்டணங்கள் பெறப்பட்டு, கூடுதல் தொகை ஏதேனும் இருந்தால், மின் நுகர்வு கட்டணத்தில் சரிசெய்யப்படும்.
- வீட்டு / குடியிருப்பு (LA1A), விசைத்தறி (LA3A2),கைத்தறி (LA1A1) மற்றும் விவசாயம் (LM41) ஆகிய கட்டண வீதங்களுக்கான அனைத்து வகையான விண்ணப்பங்களுக்கும் (தற்காலிக வழங்கல் மற்றும் குழு விண்ணப்பங்கள் நீங்கலாக) ஆன்லைன் விண்ணப்ப போர்ட்டலில் ஆதார் எண் கட்டாயமாகும்.
- இந்த விண்ணப்பத்துடன் தொடர்புடைய அனைத்து கட்டணத் தொகைகளும் த.நா.மி.உ.ம.ப.க( TANGEDCO) இணையத்தள மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் செயல்பாட்டின் போது 'Enter Grievance' பிரிவைப் பயன்படுத்தி இந்த இணையத்தளம் மூலம் விண்ணப்பம் தொடர்பான அனைத்து தீர்வுகளையும் காண முடியும்.த.நா.மி.உ.ம.ப.க அலுவலகத்தை அணுக வேண்டிய அவசியமில்லை.
- விண்ணப்பதாரர்கள் பணி முடிந்ததும் த.நா.மி.உ.ம.ப.க வழங்கிய மின்னிணைப்புகள் குறித்து தங்கள் கருத்தை சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர் விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை விண்ணப்ப வகைக்கு ஏற்ப நிரப்ப வேண்டும்,உதாரணத்திற்கு புதிய சேவை / மின் பளு கூட்டல் / மின் பளு குறைப்பு மற்றும் பிற விவரங்களாகிய பெயர், முகவரி, அலைப்பேசி எண், மின்னஞ்சல் .
- தமிழ்நாடு மின் விநியோகக் குறியீட்டில் உள்ள விதிகளின்படி ,விண்ணப்பதாரர் இணையத்தில் விவரங்களை பூர்த்தி செய்த பின்னர் பதிவேற்றிய துணை ஆவணங்களுடன் விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்,.
- வீட்டிற்குரிய வகையைத் தவிர இதர வகைகளான சிறப்பு கட்டிடங்கள், பல மாடி கட்டிடங்கள், தொழில்துறை, வணிக கட்டிடங்கள் மற்றும் பிற வகை சேவைகள் (கல்வி நிறுவனங்கள் போன்றவை) , கையொப்பமிடப்பட்ட விண்ணப்பத்தின் நகல்கள் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை மின் விநியோகத்திற்கு முன் பெறப்படும் .
- இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் / ஆவணங்களின் நகல்களை த.நா.மி.உ.ம.ப.க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அசல் சமர்ப்பிக்க தேவையில்லை.
- 12 மீட்டர் உயரம் 3 குடியிருப்பு அலகுகள் அல்லது 750 சதுர மீட்டர் மற்றும் அனைத்து வகையான தொழில்துறை கட்டிடங்களுள் இருக்கும் குடியிருப்பு கட்டிடத்திற்கு நிறைவு சான்றிதழ் தேவையில்லை. மின் இணைப்பை செயல்படுத்துவதற்கு முன் மற்ற விண்ணப்பங்களின் நிறைவு சான்றிதழ் கட்டாயமாகும்.
- சோதனை சான்றிதழ் படிவம் - இந்த படிவம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, உரிமம் பெற்ற மின் ஒப்பந்தக்காரரால் தமிழக அரசின் உரிம அதிகாரசபையால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் உரிமத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். சோதனை சான்றிதழ் படிவம் விண்ணப்பதாரரிடம் நிரந்தரமாக வைக்கப்பட வேண்டும், மேலும் எந்த கட்டத்திலும் உரிமதாரருக்கு தேவைப்படும்போது சமர்ப்பிக்க வேண்டும். (படிவத்தைப் பதிவிறக்குக)
- விண்ணப்பதாரர் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்பு அலகுகளுக்கு விண்ணப்பிக்கும் போதோ அல்லது மொத்த மின் பளு 112KW க்கும் அதிகமாக தேவைப்படும் போது “New Service Connection-Group”என்பதை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கப்பட்ட மின்சுமை 112KWயை விட அதிகமாக இருந்தால் விண்ணப்பதாரர்கள் ஒப்புதல் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். படிவத்தை விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பமிட வேண்டும் மற்றும் கையொப்பமிடப்பட்ட படிவத்தை இந்த இணையத்தளம் மூலம் மட்டுமே பதிவேற்ற வேண்டும். 112KWக்கு அதிகமான மின் பளுக்கான ஒப்புதல் படிவம்-பதிவிறக்குக
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, ‘விண்ணப்பக் கட்டணத்திற்கான ஒப்புதலும் கோரிக்கை அறிவிப்பும்’ ‘விண்ணப்ப குறிப்பு எண்’ணுடன் உருவாக்கப்படும்.
- உருவாக்கப்பட்ட கோரிக்கை இணையத்தளம் மூலம் மட்டுமே செலுத்தப்படும் . தங்களது விண்ணப்ப குறிப்பு எண்ணை பயனர்பெயராகவும் அலைபேசி எண்ணை கடவுச்சொல்லாகவும் பயன்படுத்தவும்.
- "Print Application Form"என்பதை பயன்படுத்தி முழு விண்ணப்பத்தையும் அச்சிடலாம்.
- விண்ணப்ப நிலையைப் பார்க்கவும் கட்டணம் செலுத்தவும் "Application Status Menu" என்பதை பயன்படுத்தப்படலாம்.
- மின் இணைப்பை செயல்படுத்துவதற்கான கால அவகாசங்களை காண்க.
Information to Consumers
General Information you may need to know before applying
- On site inspection,the Development Charges as applicable will be arrived and excess amount if any,
will be adjusted against CC Bills. - Adhaar number is mandatory in Online Application Portal for all kind of Applications (Except Temporary Supply and Group Applications) for the following tariffs Domestic/Residential(LA1A),Powerloom(LA3A2),Handloom(LA1A1) and Agriculture(LM41).
- All payments related to this application should be paid only through TANGEDCO Online payment portal.
- Applicants can redress all their application related issues during the process of application through this portal using the 'Enter Grievance' menu. There is no need to approach the TANGEDCO office.
- Applicants may submit their feedback on the services provided by TANGEDCO after work is completed.
- The applicant has to select the type of application and fill in the required details as per the type, say new service/ load addition/ load reduction, with other details such as name, address, mobile no., e-mail id etc can be applied only through online NSC portal .
- The applicant has to submit the application and additional forms as the case may be as per the provisions in the TNE Distribution Code after filling up the details over web along with uploaded supporting documents.
- In case of special buildings, multi-storied buildings, industrial, commercial buildings and other category of services (such as educational institutions, etc.) except the domestic category , the hard copies of the signed application and self certified documents shall be obtained before effecting supply.
- Hardcopies of the Application / Documents uploaded in this website need not be submitted in TANGEDCO office. Originals need not be produced.
- The Completion certificate is not necessary for residential building up to 14m in height not exceeding 8 dwelling units or 750 sq.m and all type of Industrial buildings.For all other applications Completion certificate is mandatory before effecting the service connection.
- Test Certificate form - This form shall be downloaded and has to be filled by the Licensed Electrical contractor having valid license issued by Licensing Authority, Government of Tamil Nadu. The Test Certificate form has to be kept with the applicant permanently and the same has to be produced as and when required by the Licensee at any stage. (Download Form)
- Applicant applying for 4 or more dwelling units or total load of more than 112KW should select only “New Service Connection-Group”
- Applicants should download the Undertaking if applied load is more than 112KW.The form should be duly signed by Applicant alone and the signed form should only be uploaded through this portal. Undertaking form for more than 112 KW-Download
- On submitting the application, the ‘Acknowledgement cum Demand Notice for Registration Fee’ would be generated along with the ‘Application Reference Number' .
- The Demand generated shall be paid through online portal only. using Application reference number as Username and Mobile number as password.
- Print out of the entire application can be taken using "Print Application Form" menu.
- "Application Status Menu" may be used to view the application status and to make the payment .
- View Timelines for effecting service connection.